Headlines

சங்கி என்றால் நண்பன்… திராவிடன் என்றால் திருடன் – சீமான் ஆவேச பேச்சு

பதிவு: புதன்கிழமை, டிசம்பர் 4, 2024, 05:40 AM சென்னை, சங்கி என்றால் நண்பன்… திராவிடன் என்றால் திருடன் என்று சீமான் கூறினார். சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழு பேர் உயிரிழந்தது மிக துயரமான சம்பவம். பருவமழை என்பது இனிமேல் இருக்காது; மழை, கனமழை, புயல் மழை என்றுதான் இருக்கும். இதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். என்னைத் தனிப்பட்ட முறையில்…

Read More

விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

பதிவு: செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 3, 2024, 07:20 AM சென்னை, கனமழை எச்சரிக்கை எதிரொலியாக தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது நேற்று முன் தினம் (01-12-2024) காலை வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய “பெஞ்சல்” புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து, மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவியது. இது,…

Read More

மீண்டும் சர்ச்சை: கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து

பதிவு: திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024, 03:10 AM மதுரை, மதுரையில் நடைபெற்ற இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். மதுரை – அழகர்கோவில் சாலையிலுள்ள தனியார் ஓட்டலில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் யங் இந்தியா அமைப்பு சார்பில், இளம் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கியதும் முதலில் தேசிய கீதம், பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து…

Read More

மாமல்லபுரம் – புதுச்சேரி இடையே ‘பெஞ்சல்’ புயல் கரையைக் கடந்தது

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 1, 2024, 03:10 AM சென்னை, நேற்று மாலை 5.30 மணிக்கு கரையக் கடக்க தொடங்கிய புயல் இரவு 11.30 மணிக்கு முழுமையாக கரையக் கடந்தது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த ‘பெஞ்சல்’ புயல் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நேற்று மாலைக்குள் சென்னை-புதுச்சேரிக்கு இடையே, மாமல்லபுரம்-புதுச்சேரி…

Read More

பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கிறது – சென்னையில் விடிய விடிய காற்றுடன் மழை

பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 30, 2024, 06:40 AM சென்னை, புயல் இன்று கரையக் கடப்பதால் பொது மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவறுத்தி உள்ளது. வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருக்கிறது. புயல் எச்சரிக்கை: மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல்…

Read More

அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்பு

பதிவு: புதன்கிழமை, நவம்பர் 27, 2024, 10:30 AM சென்னை, வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது வலுவடைந்து தெற்கு இலங்கை மற்றும்…

Read More

அரசியல் சாசன தினம் – பிரதமர் மோடி சுப்ரீம் கோர்ட்டில் இன்று உரை

பதிவு: செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024, 03:10 AM புதுடெல்லி, அரசியல் சாசன தினத்தையொட்டி சுப்ரீம் கோர்ட்டிலும் இன்று சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுகிறது. அதேநேரம் இந்த ஆண்டு, அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட 75-வது ஆண்டு ஆகும். எனவே கூடுதல் சிறப்புடன் மத்திய அரசு இந்த நாளை கொண்டாடுகிறது. இதையொட்டி பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு மத்திய அரசு…

Read More

இன்று உருவாகிறது தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் – 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

பதிவு: திங்கட்கிழமை, நவம்பர் 25, 2024, 07:10 AM சென்னை, தமிழகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று மாலையில் இருந்து தமிழ்நாட்டில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது மேலும்…

Read More

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அபார வெற்றி – ஜார்கண்டில் ஆட்சியை தக்கவைத்த காங்கிரஸ் கூட்டணி

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024, 05:10 AM மும்பை, மராட்டியத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்…

Read More

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தலில்… ஜெயிப்பது யார்?

பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 23, 2024, 07:10 AM புதுடில்லி, மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான ‘மஹாயுதி’ கூட்டணி ஆட்சியில் உள்ளது. இங்குள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 20ல் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில், 66.05 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கூடவே, நான்டெட் லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது….

Read More