Headlines

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

பதிவு: திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024, 02:`10 AM சென்னை, குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்காத மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். குடியரசு தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் டெல்லியில் மாநில அரசுகளின் சார்பில் அனுப்பப்படும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறும். இதன்படி, 2025 குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்குபெற 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அணிவகுப்பு நிகழ்விற்கு…

Read More

60 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் புயலால் கடல் சீற்றத்தில் மக்களின் மரண ஓலத்துடன் உருக்குலைந்த தனுஷ்கோடி

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, 22, 2024 04:20 AM ராமேஸ்வரம், அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (டிசம்பர், 22) இரவில் ஏற்பட்ட புயலால் கடல் சீற்றத்தில் மக்களின் மரண ஓலத்துடன் புனித நகரான தனுஷ்கோடி உருக்குலைந்தது. அந்த புயல் ஏற்படுத்திய அழிவின் எச்சங்களாக இடிந்த கட்டடங்கள் இன்றும் காட்சியளிக்கின்றன. இலங்கையில் சீதையை மீட்டு ராமபிரான் திரும்பிய போது அவர் எய்த அம்பு விழுந்த இடம் தனுஷ் (வில், அம்பு) கோடி என ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென்கிழக்கு…

Read More

வங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம் – தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா..?

பதிவு: சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024 08:10 AM சென்னை, 26-ந் தேதிக்கு பிறகு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்கக்கடலில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக நீடித்து வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று வலுப்பெற்றது. இது, சென்னைக்கு கிழக்கே 370 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திராவின் விசாகபட்டினத்தில் இருந்து தெற்கே 450 கிலோ…

Read More

43 ஆண்டுகளில் முதல்முறை.. பிரதமர் மோடி இன்று குவைத் பயணம்

பதிவு: சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024 08:00 AM புதுடெல்லி, 43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றும் நாளை என இரண்டு நாள் பயணமாக, குவைத் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 43 ஆண்டுகளுக்குப் பிறகு வளைகுடா நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். குவைத்தின் அமீர், ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் இந்த பயணம்…

Read More

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்

பதிவு: சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024 12:30 PM சென்னை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று உயிரிழந்தார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நாளை தகனம் மறைந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல், நாளை ராமாபுரத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும்,…

Read More

செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக தொடர்கிறார்? – மீண்டும் கேள்வி கேட்டது சுப்ரீம் கோர்ட்

பதிவு: சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024 04:30 AM புதுடில்லி, செந்தில் பாலாஜி அமைச்சராக எப்படி தொடர்கிறார் என்று சுப்ரீம் கோர்ட் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜாமினில் வெளியே வந்தார். பிறகு, மறுநாளே அவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சராக அவர் பொறுப்பேற்றதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வித்யாகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அமைச்சர் பதவியில் இல்லை…

Read More

நடிகர் அல்லு அர்ஜூன் கைது சரியா?

பதிவு: வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024 08:00 PM ஹைதராபாத், நடிகர் அல்லு அர்ஜூன் கைது விவாகரத்தில், தியேட்டருக்கு வருவதாக 2 நாட்கள் முன்பே போலீசிடம் முறைப்படி அனுப்பிய கடிதம் வெளியாகி புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபல நடிகர் அல்லு அர்ஜூன் நடித்து வெளியாகி உள்ள புஷ்பா 2 படம் அண்மையில் வெளியாகி வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் முதல் நாள் காட்சியை காண நடிகர் அல்லு அர்ஜூன், ஹைதராபாத்தில் உள்ள பிரபல…

Read More

2024-ம் ஆண்டின் சிறந்த மனிதர் டெனால்டு டிரம்ப் – மீண்டும் தேர்வு செய்தது ‘டைம்’ இதழ்

பதிவு: வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024 03:00 AM வாஷிங்டன், 2024-ம் ஆண்டின் சிறந்த மனிதர் என அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டெனால்டு டிரம்ப்பை மீண்டும் ‘டைம்’ இதழ் தேர்வு செய்துள்ளது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் புகழ் பெற்ற ‘டைம்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் வாக்கெடுப்பு நடத்தி மிகச் சிறந்த மனிதரை அந்த இதழ் தேர்ந்தெடுப்பது வழக்கம்.அப்படித் தேர்வு செய்யப்படுபவரின் புகைப்படம் டைம் இதழில் வெளி வரும். இதன்படி 2024ம் ஆண்டிற்கான சிறந்த மனிதர்…

Read More

‘மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி தர மாட்டோம். அதையும் மீறி சுரங்கம் தோண்டப்பட்டால், முதல்வர் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன்,” – சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

பதிவு: செவ்வாய்கிழமை, டிசம்பர் 10, 2024 03:00 AM சென்னை, ‘மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி தர மாட்டோம். அதையும் மீறி சுரங்கம் தோண்டப்பட்டால், முதல்வர் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன்,” என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். மதுரை மாவட்டம், மேலுார் அடுத்த நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க, ‘இந்துஸ்தான் ஜிங்க்’ என்ற நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதை ரத்து செய்யக்கோரி நேற்று தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சபை…

Read More

திருமாவளவன் கட்டுப்பாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லை – விஜய்க்கு அரசியல் அறிவு தேவை – அண்ணாமலை

பதிவு: திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024 02:10 AM கோவை, திருமாவளவன் கட்டுப்பாட்டில் விசிக இல்லை என்று அண்ணாமலை கூறினார். கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- புத்தக வெளியீட்டு விழாவின் மூலம், நக்சல்வாதத்தை ஊக்கப்படுத்த புத்தக பதிப்பகத்தார் முயற்சிக்கிறார்களா?. தமிழகத்தில் அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் நடத்துகிறார்கள். அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட வேறு ஆட்களே இல்லையா?. லாட்டரி மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, ஆனந்த் டெல்டும்டேவை புத்தக வெளியிட்டு விழாவுக்கு அழைத்தது ஏன்?….

Read More