Headlines

ஏற்காட்டில் பழங்குடியின ஏகலைவா அரசு பள்ளி மாணவிகள் 10 பேருக்கு பாலியல் தொந்தரவு – போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது

பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 10, 2025, 06:`55 AM ஏற்காடு, ஏற்காட்டில் உள்ள ஏகலைவா பள்ளி பழங்குடியின மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அறிவியல் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படிக்கும் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடம் சொல்லித் தரப்படுகிறது. இந்த பள்ளியில்…

Read More

இங்கிலாந்து சென்றாலும், எனது இதயம் தமிழகத்தில்தான் இருக்கும் – அண்ணாமலை பேட்டி

பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2024, 08.20 AM சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய், ஸ்பெயினுக்கு சென்றபோது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை என்று அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத உயர் படிப்புக்காக இன்றிரவு இங்கிலாந்து செல்கிறேன். அரசியல் படிப்புக்காக வெளிநாடு சென்றாலும் தமிழக அரசின் நடவடிக்கைகளை உற்று கவனிப்பேன். ஆளுக்கட்சிக்கு எதிரான சண்டை தொடரும். வெளிநாடு சென்றாலும், எனது…

Read More

பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் – தி.மு.க. நாடகமாடுகிறது: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குற்றச்சாட்டு

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025, 01:20 AM சென்னை, பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் – தி.மு.க. நாடகமாடுகிறது: விஜய் குற்றச்சாட்டு – 8 வழி சாலையை எதிர்த்தவர்கள் பரந்தூர் திட்டத்தை ரத்து செய்ய மறுப்பது ஏன்? – ‘உங்களுடன் நான் இருப்பேன்’: போராட்ட குழுவினரிடம் உறுதி பரந்தூர் விவகாரத்தில் தி.மு.க. மக்களை ஏமாற்றி நாடகமாடுகிறது என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குற்றஞ்சாட்டினார். பரந்தூர் மக்களுடன் உறுதியாக நிற்பேன். சட்டப் போராட்டம் நடத்துவோம் என்றும்…

Read More

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது

பதிவு: வியாழக்கிழமை, அக்டோபர் 17, 2024, 07:50 AM சென்னை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு வடக்கில் கரையைக் கடந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது . இந்த நிலையில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய…

Read More

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு – பரிசோதனையில் உறுதியானதால் அதிர்ச்சி

அமராவதி, பதிவு: வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 20, 2024, 3.30 AM திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியில் உள்ளது. அம்மாநில முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு உள்ளார். இந்த நிலையில், திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பை ஜெகன் மோகனின் அரசு கலந்ததாக ஆந்திர…

Read More

பிரதமர் நரேந்திர மோடி, 2025-ம் ஆண்டை மாற்றத்திற்குரிய அதிவிரைவான முன்முயற்சிகளுடன் தொடங்கியுள்ள முக்கிய பணிகள்

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025, 04:`15 AM புதுடெல்லி, வெறும் 15 நாட்களில், 2025-ம் ஆண்டின் மாற்றத்திற்கான தொடக்கத்தை பிரதமர் மோடியின் தலைமை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, 2025-ம் ஆண்டை மாற்றத்திற்குரிய அதிவிரைவான முன்முயற்சிகளுடன் தொடங்கியுள்ளார். முற்போக்கான, தற்சார்புள்ள, ஒன்றுபட்ட இந்தியாவுக்கான தமது தொலைநோக்குப் பார்வையை அவர் வெளிப்படுத்தியுள்ளார். உள்கட்டமைப்பு, அறிவியல் ஆராய்ச்சியை மேம்படுத்துவது முதல் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பது, இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவது வரை, அவரது தலைமை, வரவிருக்கும் ஆண்டிற்கான குறிப்பிடத்தக்க…

Read More

முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து முதல்-அமைச்சர் மரியாதை

பதிவு: புதன்கிழமை, அக்டோபர் 30, 2024, 11:00 AM கமுதி, முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் சுதந்திர போராட்ட வீரர், தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று அரசியல் விழாவாக கொண்டாடப்பட்டது. தேவரின் அரசியல் வரலாறு, அரசியல் ஈடுபாடு குறித்த நிகழ்ச்சிகள் சொற்பொழிவு நடைபெற்றது. முத்துராமலிங்கத்தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில்…

Read More

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 20, 2024, 04.00 AM போச்சம்பள்ளி, பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையில் தேசிய மாணவர் படை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து…

Read More

சங்கி என்றால் நண்பன்… திராவிடன் என்றால் திருடன் – சீமான் ஆவேச பேச்சு

பதிவு: புதன்கிழமை, டிசம்பர் 4, 2024, 05:40 AM சென்னை, சங்கி என்றால் நண்பன்… திராவிடன் என்றால் திருடன் என்று சீமான் கூறினார். சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏழு பேர் உயிரிழந்தது மிக துயரமான சம்பவம். பருவமழை என்பது இனிமேல் இருக்காது; மழை, கனமழை, புயல் மழை என்றுதான் இருக்கும். இதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். என்னைத் தனிப்பட்ட முறையில்…

Read More

தமிழகத்தில் 2 பேருக்கு ‘ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்’ (HMPV) தொற்று உறுதி

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 07, 2025, 01:`55 AM சென்னை, எச்.எம்.பி.வி. தொற்று குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவின் பல்வேறு மாகாணங்களில், எச்.எம்.பி.வி., (HMPV) எனப்படும், ‘ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்’ என்ற தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் குவிந்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றால் பாதிப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. எனினும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி இருந்தன. இதற்கிடையில்,…

Read More