Headlines

வடலூர் சத்திய ஞானசபையில் இன்று ஜோதி தரிசனம்

பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025, 07:`15 AM விழுப்புரம், வடலூர் சத்தியஞான சபையில் தைப்பூச விழா கொடியேற்றம் நடைபெற்றது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்…! என்று பாடி ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த ராமலிங்க வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கானோர் வருவார்கள். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச விழா மற்றும் 154-வது ஜோதி…

Read More

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார் வி.சி.சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார் வி.சி.சந்திரகுமார் பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025, 06:`45 AM சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று காலை ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றார். ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்து, அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 8-ந்தேதி நடந்தது. இதில் ஆளும் தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1 லட்சத்து 14 ஆயிரத்து 439 வாக்குகளை பெற்றார். அவரை…

Read More

ஏற்காட்டில் பழங்குடியின ஏகலைவா அரசு பள்ளி மாணவிகள் 10 பேருக்கு பாலியல் தொந்தரவு – போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது

பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 10, 2025, 06:`55 AM ஏற்காடு, ஏற்காட்டில் உள்ள ஏகலைவா பள்ளி பழங்குடியின மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அறிவியல் ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் படிக்கும் அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பாடம் சொல்லித் தரப்படுகிறது. இந்த பள்ளியில்…

Read More

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 10, 2025, 05:`55 AM சென்னை, காட்டாட்சி தர்பாரை மக்கள் வீழ்த்துவார்கள் – பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம்: எடப்பாடி கடும் கண்டனம் – குற்றவாளிகளை கட்டுப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்க்கிறது ஸ்டாலின் ஆட்சி தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; பாலியல் குற்றவாளிகளை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்க்கிறது தி.மு.க. அரசு என எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க.வின் காட்டாட்சி தர்பாரை மக்கள் வீழ்த்துவார்கள் என்றும் அவர் கூறினார். அண்ணா…

Read More

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் மகத்தான வெற்றி!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு, வெற்றி சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீகாந்த் வழங்கினார் அருகில் ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராஜகோபால் சுன்கரா. தேர்தல் பார்வையாளர் அஜய் குமார் குப்தா உட்பட பலர் உள்ளனர். பதிவு: ஞாயிறுக்கிழமை, பிப்ரவரி 09, 2025, 07:`15 AM ஈரோடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு மக்கள் தொடர்ந்து அங்கீகாரம்! – கழகத் தோழர்கள் மகிழ்ச்சி, ஆரவாரம், கொண்டாட்டம்! ஈரோடு…

Read More

டில்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா அபார வெற்றி

பதிவு: ஞாயிறுக்கிழமை, பிப்ரவரி 09, 2025, 05:`55 AM புதுடில்லி. மத்தியிலும், பல மாநில தேர்தல்களிலும் வெற்றி பெற்றாலும், தேசிய தலைநகர் டில்லியைக் கைப்பற்ற முடியாமல் திணறி வந்த பாரதிய ஜனதா 27 ஆண்டுகளுக்கு பின், அங்கு ஆட்சி அமைக்க உள்ளது. டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., அபார வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக பெரும் முட்டுக்கட்டையாக இருந்த ஆம் ஆத்மி என்ற தடையை பிரதமர் நரேந்திர மோடி அகற்றி உள்ளார். கடந்த 1993ல்…

Read More

டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலை முடிகிறது – அரசியல் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை

பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 03, 2025, 06:`10 AM புதுடில்லி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. டில்லியில் பா.ஜ.,வை ஆட்சி கட்டிலில் அமர்த்தும் நோக்கில், பிரதமர் மோடி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாளை மறுதினம் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன. இந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியும்,…

Read More

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு

பதிவு: திங்கட்கிழமை, பிப்ரவரி 03, 2025, 06:`00 AM ஈரோடு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓயும் நிலையில், ஓட்டுச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளதை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலிலும், நாளை மறுதினம் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில், 46 வேட்பாளர்கள் போட்டியில் உள்ள நிலையில், இன்று மாலை 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. இன்று மதியம் 3:00 மணிக்கு மேல், நாம் தமிழர் கட்சியின்…

Read More

2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்… முக்கிய அம்சங்கள் அதிரடி அறிவிப்புகள்!

பதிவு: ஞாயிறுக்கிழமை, பிப்ரவரி 02, 2025, 06:`45 AM புதுடில்லி, நடுத்தர வருவாய் பிரிவினரின் வரிச் சுமையை குறைக்கும் வகையில், ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் இனி வரி செலுத்த தேவையில்லை என, மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த வருமான உச்ச வரம்பு, கடந்த ஆண்டு 7 லட்சம் ரூபாயாக இருந்தது; நேற்றைய அறிவிப்பின்படி, ஆண்டு வருமானம் 12.75 லட்சம் ரூபாயாக இருந்தாலும், வரிக்கழிவை முறையாக பயன்படுத்தினால்,…

Read More

மக்களை பாதிக்காமல் பரந்தூர் விமான நிலைய திட்டம் – தமிழ்நாடு அரசு

பதிவு: புதன்கிழமை, ஜனவரி 22, 2025, 03:10 AM சென்னை, பரந்தூர் விமான நிலைய திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமங்களில் இருந்து 5,183 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலங்கள் விளை நிலங்களாகவும், ஏரி, குளங்களாகவும் இருப்பதால் இந்த திட்டத்திற்கு…

Read More