Headlines

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 52- ஆக உயர்வு

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 21, 2024, 05.00 PM கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் 17 பேர் வரையில் உயிரிழந்தனர். நள்ளிரவில் இறப்பின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து அதிகாலையில் உயிரிழப்பு 29-ஆக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து மேலும்…

Read More

தமிழ்நாட்டை விட்டு வெளியேறி ஆந்திராவில் தஞ்சம் அடைய போகிறோம்: ஏகனாபுரம் கிராம மக்கள் அறிவிப்பு

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 16, 2024, 07.00 AM காஞ்சீபுரம், பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டிவரும் நிலையில் தமிழ்நாட்டை விட்டு வெளியேற போவதாக ஏகானபுரம் கிராம மக்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரந்தூர் விமான நிலைய திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டிவரும் நிலையில் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி, ஆந்திர மாநில அரசிடம் அகதிகளாக தஞ்சம் அடைய சித்தூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க…

Read More

இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக உபேந்திரா திவேதி நியமனம்

பதிவு: புதன்கிழமை, ஜூன் 12, 2024, 09.00 AM புதுடில்லி, நாட்டின் 30-வது ராணுவ தளபதியாக உபேந்திரா திவேதி பொறுப்பு ஏற்கவுள்ளார். நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் பாண்டே கடந்த 2022-ம் ஆண்டு பதவியேற்றார். இவரது பதவி காலம் கடந்த மே.31-ம் தேதி நிறைவடைந்த நிலையில் மக்களவை தேர்தலையொட்டி அவரது பதவிகாலம் மேலும் ஒரு மாதம் என ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து மனோஜ் பாண்டே பதவி காலம் வரும் 30-ம் தேதியுடன்…

Read More

‘மோடி 3.0’: மத்திய மந்திரிகளுக்கு இலாக்கா ஒதுக்கீடு – யார் யாருக்கு எந்த துறை? – முழு விபரம்

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன் 11, 2024, 02.45 AM புதுடில்லி, 3வது முறையாக மோடி பிரதமராக 09-06-2024 பதவியேற்றார். ‘மோடி 3.0’ அமைச்சரவையில் 71 பேர் பொறுப்பேற்றுள்ளனர். மொத்தம் 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், ஐந்து பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர். மோடி உட்பட பா.ஜ.,வை சேர்ந்த 61 பேரும், கூட்டணி கட்சியில் 11 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். பிரதமர் மோடி: :பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும்…

Read More

இந்திய பிரதமராக இன்று பதவியேற்கிறார் நரேந்திர தாமோதரதாசு மோதி

பதிவு: ஞாயிற்றுகிழமை, ஜூன் 9, 2024, 05.00 AM புதுடெல்லி, 3வது முறையாக மோதி பிரதமராக இன்று பதவியேற்கிறார். இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளும் அரசை தேர்வு செய்ய கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் கடந்த 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கடந்த 10 ஆண்டுகளாக தனிப்பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆண்டு வந்த பா.ஜ.க.வுக்கு…

Read More

ஜூன் 9-ந்தேதி இரவு 7.15 மணிக்கு பிரதமர் மோடிக்கு பதவி பிரமாணம் – ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு

பதிவு: சனிக்கிழமை, ஜூன் 8, 2024, 03.20 AM புதுடெல்லி, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4-ம் தேதி எண்ணப்பட்டன. மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. கூட்டணியில் இடம்பெற்றிருந்த…

Read More

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எப்போது..?

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 7, 2024, 06.30 AM சென்னை, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் மரணம் அடைந்தார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார். எனவே அந்த தொகுதிக்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் போதே இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 7 கட்ட நாடாளுமன்ற தேர்தலும் நடந்து முடிந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும்…

Read More

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி – மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கிறது பா.ஜனதா

பதிவு: புதன்கிழமை, ஜூன் 5, 2024, 07.00 AM புதுடெல்லி, இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக தேசிய அளவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ். சமாஜ்வாடி, கம்யூனிஸ்டு கட்சிகள், தி.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து ‘இந்தியா கூட்டணி’ என்று ஓர் அணியை அமைத்தன. தமிழ்நாட்டில் இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,…

Read More

ஜூன் 1-ந் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே 28, 2024, 09.20 AM புதுடெல்லி, மத்தியில் ஆட்சி அமைப்பது யார்? என்பது குறித்து ‘இந்தியா’ கூட்டணி டெல்லியில் வருகிற 1-ந் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந் தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது….

Read More

நாடாளுமன்ற 7-ம் கட்ட தேர்தல்: பிரதமர் மோடி, நடிகை கங்கனா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் போட்டி

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே 28, 2024, 09.10 AM புதுடெல்லி, பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், உமர் அப்துல்லா பாராமுல்லா தொகுதியிலும், நடிகை கங்கனா ரணாவத் மண்டி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். நாட்டில் 18-வது மக்களவைக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் மக்களவை தேர்தல் அல்லது பொது தேர்தலானது 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதன்படி, கடந்த 19-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், ஏப்ரல் 26-ந்தேதி 2-வது கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது. தொடர்ந்து மே 7, மே 13, மே…

Read More