
பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை: நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 20, 2024, 04.00 AM போச்சம்பள்ளி, பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் சார்பில் கடந்த 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையில் தேசிய மாணவர் படை முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளியை சேர்ந்த 17 மாணவிகள் கலந்து…