
நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 64% வாக்குப்பதிவு
புதுடெல்லி, பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024, 4.30 AM நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நேற்று நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்திய ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் இந்த பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 16-ந்தேதி வெளியானது.. ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியும்…