
அப்பா… இந்தியாவுக்கான உங்களுடைய கனவே என்னுடையது. உங்கள் கனவுகளை நிறைவேற்றுவேன் – ராகுல் காந்தி நெகிழ்ச்சி
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 20, 2024, 02.20 PM புதுடெல்லி, உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துக் கொள்வேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான வீரபூமிக்கு சென்ற ராகுல் காந்தி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன், பிரியங்கா காந்தி, காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்….