நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி – மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கிறது பா.ஜனதா

பதிவு: புதன்கிழமை, ஜூன் 5, 2024, 07.00 AM புதுடெல்லி, இந்திய நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. இந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக தேசிய அளவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ். சமாஜ்வாடி, கம்யூனிஸ்டு கட்சிகள், தி.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து ‘இந்தியா கூட்டணி’ என்று ஓர் அணியை அமைத்தன. தமிழ்நாட்டில் இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,…

Read More

பிரதமர் மோடி 30ம் தேதி தமிழ்நாடு வருகை

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே 28, 2024, 09.00 AM சென்னை, பிரதமர் மோடி வரும் 30ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 30ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 30ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி கன்னியாகுமரி வர உள்ளார். அவர் 31ம் தேதி முதல் 1ம் தேதி…

Read More

நாடாளுமன்ற தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது – பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

புதுடெல்லி, பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024, 06.40 AM இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. அந்தவகையில் கேரளா (20…

Read More

இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் – ராகுல் காந்தி உறுதி

அமராவதி (மராட்டியம்), பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024, 05.30 AM இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி கூறினார் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முன்னுரிமை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய ராகுல்…

Read More

சாம் பிட்ரோடா கருத்து.. மரணத்திற்கு பிறகும் மக்களிடம் கொள்ளையடிக்க விரும்புகிறார்கள்: காங்கிரசை சாடிய மோடி

புதுடெல்லி, பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024, 05.20 AM நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், காங்கிரஸ் பறித்துவிடும் என மோடி குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, சாதிவாரி கணக்கெடுப்பு, பொருளாதார ரீதியிலான ஆய்வு தொடர்பாக ராகுல் காந்தி கூறிய கருத்து பேசுபொருளாகி உள்ளது. மக்களின் சொத்துக்களை அபகரித்து குறிப்பிட்ட சிலருக்கு வழங்க காங்கிரஸ் நினைப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். ஊடுருவல்காரர்களுக்கும், அதிக பிள்ளைகள் பெற்றவர்களுக்கும் வழங்குவார்கள் என்று…

Read More

நாடாளுமன்ற தேர்தல்: 3-ம் கட்ட தேர்தலில் 1,351 பேர் போட்டி

புதுடெல்லி, பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024, 05.15 AM குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி தமிழகம் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. 2-ம் கட்ட தேர்தல் வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது. அடுத்தகட்டமாக 3-ம் கட்ட தேர்தல் வரும் மே 7-ந் தேதி நடக்க இருக்கிறது. குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும்…

Read More

நாடாளுமன்ற தேர்தல்: ராகுல்காந்தி இன்று முதல் மீண்டும் பிரசாரம்

புதுடெல்லி, பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024, 09.00 AM உடல்நலக்குறைவு காரணமாக சிறிது இடைவெளிக்குப் பிறகு, ராகுல் காந்தி இன்று முதல் மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி, இடைவிடாமல் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் இந்திய கூட்டணி கூட்டம் நடைபெற இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், நிகழ்ச்சியில் பங்குபெறாமலே டெல்லி திரும்பினார். கூட்டத்தில் அவருக்கு பதிலாக மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கி பேசினார். தற்போது ராகுல்காந்தி…

Read More

நாடாளுமன்ற தேர்தல்: குஜராத்தில் சோனியா, ராகுல், கார்கே உள்பட 40 பேர் நட்சத்திர பேச்சாளர்கள்

ஆமதாபாத், பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024, 07.30 AM குஜராத்தில் காங்கிரசின் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சோனியா, ராகுல், கார்கே பெயர்கள் இடம்பெற்றுள்ளன. நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 26-ந் தேதி நடக்க உள்ளது. குஜராத்தில் மே 7-ந் தேதி 26 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதையொட்டி அங்கு பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. காங்கிரசின் மூத்த தலைவர்களான சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன…

Read More

சென்னையில் ஓட்டுப்போடாத 21 லட்சம் வாக்காளர்கள் – ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை, பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2024, 06.15 AM சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளில் 21 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போடவில்லை என மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எந்திரங்கள் அந்தந்த பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், சென்னை லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு…

Read More

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது – சத்யபிரத சாகு தகவல்

சென்னை, பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024, 4.50 AM உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல் நேற்று தொடங்கியது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54…

Read More