பழனி முருகன் கோவிலில் காவடி எடுத்து அண்ணாமலை வழிபாடு

பதிவு: புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025, 06:`45 AM பழனி, பழனி முருகன் கோவிலில், தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் நேற்று தைப்பூச விழா கொண்டாடப்பட்ட நிலையில், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று இரவு காரில் பழனிக்கு வந்தார். பின்னர் அடிவாரத்தில் இருந்து மயில் காவடி எடுத்து திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அருள்ஜோதி வீதி வழியாக காவடி எடுத்தபடி…

Read More

இன்று தைப்பூச திருவிழா – திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள்

பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025, 07:`45 AM திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடக்கிறது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை…

Read More

தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும்

பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025, 07:`45 AM சென்னை, தைப்பூச நாளான இன்று ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- “பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூசம் நாளில் ஆவணப்பதிவுகள்…

Read More