
மகனை துணை முதல்-அமைச்சர் ஆக்கியதுதான் திமுக அரசின் சாதனை – எடப்பாடி பழனிசாமி
பதிவு: ஞாயிறுக்கிழமை, ஜனவரி 19, 2025, 04:`15 AM சென்னை, தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீதத்தை கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார். சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது; “எம்ஜிஆர் பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி நடத்த முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை. நாம் தாம் வாரிசு. நான் என்ன மிட்டா மிராசா, தொழிலதிபரா? சாதாரண தொண்டன்….