
பரபரக்கும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி: பா.ஜனதாவில் இணைந்த காங்கிரஸ் தலைவர்
வயநாடு, பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2024, 06.10 AM பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, தான் பா.ஜனதாவில் இணைந்ததாக சுதாகரன் தெரிவித்தார். கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் ராகுல்காந்தி 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவர் சமீபத்தில் வயநாட்டுக்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்து விட்டு சென்றார். இதற்கிடையே வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த சுதாகரன் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மாவட்ட பா.ஜனதா தலைவர் பிரசாந்த் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார்….