
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு
பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 7, 2024, 05.30 AM சென்னை, சொத்துக் குவிப்பு வழக்கில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம், இன்று(ஆக.,7) உத்தரவு பிறப்பிக்கிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக, அ.தி.மு.க., ஆட்சியின் போது வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் மேல் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, அறிக்கையை, சிறப்பு நீதிமன்றத்தில்…