
பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் – சீமான்
பதிவு: புதன்கிழமை, மே 22, 2024, 04.20 PM சென்னை, பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை மீண்டும் 70% வரை உயர்த்த முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்துவதற்குக் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த மார்ச் மாதம்தான் பத்திரப்பதிவு கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திய தி.மு.க. அரசு தற்போது மேலும் 70% வரை…