
நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு
சென்னை, பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024, 4.40 AM தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்கு பதிவாகியுள்ளது என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மாவட்டம் வாரியாக வாக்கு சதவிகிதம் விவரம் கள்ளக்குறிச்சி – 75.67 தர்மபுரி – 81.40 சிதம்பரம்…