தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுக ஆர்ப்பாட்டம்
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜனவரி 07, 2025, 08:`05 AM சென்னை, கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பாஜக ஆளும் மாநிலங்களில் அமைதியாக இருக்கும் கவர்னர்கள், பாஜக அல்லாத மாநில அரசுகளில் தனி ராஜாங்கம் நடத்த முயல்கிறார்கள். கவர்னர் மாளிகைகளை வைத்து மாநில நிர்வாகத்தை முடக்குவதை ஒரு வாடிக்கையாகவே வைத்திருக்கிறது மோடி அரசு. அதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு தமிழ்நாடு…