
“பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா” அமைப்பு மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
பதிவு: சனிக்கிழமை, அக்டோபர் 19, 2024, 06:45 AM புதுடில்லி, பி.எப்.ஐ., எனப்படும் பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பு பயங்கரவாத்துக்கு நிதி திரட்டியதாகவும், அந்த அமைப்புக்கு சொந்தமான, 56 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பி.எப்.ஐ., அமைப்பு பயங்கரவாதத்துக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பல்வேறு மாநிலங்களிலும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் பல்வேறு மாநிலங்களின் போலீசார் மற்றும் என்.ஐ.ஏ., அமைப்பினர்…