நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தம்

பதிவு: சனிக்கிழமை, ஆகஸ்ட் 17, 2024, 05.30 AM புதுடெல்லி, பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கை தீவிரமாக எடுத்துள்ள இந்திய மருத்துவ சங்கம் இன்று (சனிக்கிழமை) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பயிற்சி பெண் டாக்டர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்து…

Read More

சவுக்கு சங்கர் வழக்குகளை விசாரிக்கவும் கூடாது – நடவடிக்கையும் கூடாது…! சுப்ரீம் கோர்ட் அதிரடி!

பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 14, 2024, 06.00 PM புதுடில்லி: சவுக்கு சங்கர் மீதான வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது. பெண் போலீஸார் மற்றும் அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் மீது சென்னை, சேலம், திருச்சி உள்பட பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. தன் மீது…

Read More

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. குழு விசாரணை இன்று தொடங்கும்

பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 14, 2024, 04.50 AM புதுடெல்லி, மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கை விசாரிப்பதற்காக, சி.பி.ஐ. அமைப்பின் சிறப்பு மருத்துவ மற்றும் தடய அறிவியல் குழு இன்று காலை புறப்படும். மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இதில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி கொடூர கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில்…

Read More

சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம்

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 13, 2024, 02.00 AM மதுரை, யூடியூபர் சவுக்கு சங்கர் மீது மற்றொரு வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கடந்த மே 4ஆம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள தி ரிவேரா ரிசர்ட்டில் தங்கிருந்த போது 409 கிராம் எடை கொண்ட கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக தேனி போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவரது நண்பர்கள் ராம் பிரபு, ராஜரத்தினம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் சவுக்கு சங்கர் மீது நேற்று…

Read More

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: காங்கிரஸ் இளைஞர் அணி நிர்வாகி அஸ்வத்தாமன் கைது

பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 7, 2024, 01.30 PM சென்னை, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, கூட்டாளி திருவேங்கடம் உள்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச்…

Read More

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் வெட்டிக்கொலை

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூலை 05, 2024, 08.40 PM சென்னை, சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். சென்னை பெரம்பூரில் இவரது வீடு உள்ளது. இன்று இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்மநபர்கள் ஆம்ஸ்டிராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். பலத்த காயமடைந்த ஆம்ஸ்டிராங்க், சென்னை கிரீன்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான…

Read More

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 52- ஆக உயர்வு

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 21, 2024, 05.00 PM கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் இரவு 11 மணியளவில் 17 பேர் வரையில் உயிரிழந்தனர். நள்ளிரவில் இறப்பின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து அதிகாலையில் உயிரிழப்பு 29-ஆக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து மேலும்…

Read More

மாணவிகளிடம் பாலியல் பேரம் புகார்: பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் இன்று தீர்ப்பு

பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024, 06.50 AM ஸ்ரீவில்லிபுத்தூர், கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி பாலியல் பேரம் பேசியதாக நிர்மலாதேவி மீது புகார்கள் எழுந்தன. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந்தேதி நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை…

Read More

320-ஐ எட்டிய ரத்த சர்க்கரை அளவு: திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு இன்சுலின்

புதுடெல்லி, பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024, 07.50 AM சிறையில் உள்ள டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஊசி மூலம் இன்சுலின் செலுத்தப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு உள்ளது. நீரிழிவு நோயாளியான கெஜ்ரிவால், சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக அவருக்கு இன்சுலின்…

Read More

‘என் சாவுக்கு தந்தையும், சகோதரர்களும் காரணம்’ – கடிதம் எழுதிவிட்டு இளம்பெண் தற்கொலை

பள்ளிக்கரணை, பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024, 07.20 AM ஆணவ படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கணவர் இழப்பை தாங்க முடியாமல் மனைவி தற்கொலை செய்து கொண்டார். சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரவீன் (வயது 25). மெக்கானிக். அவருடைய மனைவி ஷர்மிளா (22). பி.பி.ஏ.பட்டதாரி ஆவார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவரும் நீண்ட நாட்கள் காதலித்து வந்தார்கள். காதலுக்கு ஷர்மிளாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில்,…

Read More