ஜம்மு மற்றும் காஷ்மீர் – முதல்கட்ட சட்டசபை தேர்தலில் 61 சதவீத வாக்குகள் பதிவு

ஸ்ரீநகர், பதிவு: வியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2024, 4.20 AM ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான முதல்கட்ட சட்டசபை தேர்தலில் அதிக அளவாக கிஷ்த்வார் மாவட்டத்தில் 80.14 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதன்பின்பு, ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதில், ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசம் என்ற அந்தஸ்து…

Read More

இங்கிலாந்து சென்றாலும், எனது இதயம் தமிழகத்தில்தான் இருக்கும் – அண்ணாமலை பேட்டி

பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2024, 08.20 AM சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய், ஸ்பெயினுக்கு சென்றபோது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை என்று அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத உயர் படிப்புக்காக இன்றிரவு இங்கிலாந்து செல்கிறேன். அரசியல் படிப்புக்காக வெளிநாடு சென்றாலும் தமிழக அரசின் நடவடிக்கைகளை உற்று கவனிப்பேன். ஆளுக்கட்சிக்கு எதிரான சண்டை தொடரும். வெளிநாடு சென்றாலும், எனது…

Read More

கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ் நாட்டில்தான்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2024, 08.10 AM சென்னை, கட்சியினரின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அமெரிக்கா சுற்றுப்பயணம் செல்கிறார். வெளிநாடு பயணம் மேற்கொள்ள நிலையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் என்…

Read More

முதலீடுகளை ஈர்க்க இன்று அமெரிக்கா செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 27, 2024, 07.10 AM சென்னை, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா செல்கிறார். தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி (இன்று) அமெரிக்கா செல்கிறார். இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து…

Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை உறுதிமொழி ஏற்று கொடியை அறிமுகம் செய்தார் விஜய்

பதிவு: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2024, 06.10 AM சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அதன் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று அறிமுகம் செய்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை இந்தாண்டு பிப்ரவரியில் துவக்கினார். கட்சியின் கொடி, கொள்கை விளக்க பாடல் வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கொடியை அறிமுகம் செய்த விஜய்,…

Read More

சொத்து குவிப்பு வழக்கில் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரனை விடுவித்தது செல்லாது: ஐகோர்ட் உத்தரவு

பதிவு: வியாழக்கிழமை, ஆகஸ்ட் 8, 2024, 05.00 AM சென்னை, சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அவர்கள் மீதான வழக்கை மீண்டும் முதலில் இருந்து தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2006-11 திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக…

Read More

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு

பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 7, 2024, 05.30 AM சென்னை, சொத்துக் குவிப்பு வழக்கில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்குகளில், சென்னை உயர் நீதிமன்றம், இன்று(ஆக.,7) உத்தரவு பிறப்பிக்கிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் ஆகியோருக்கு எதிராக, அ.தி.மு.க., ஆட்சியின் போது வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் மேல் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத் துறை, அறிக்கையை, சிறப்பு நீதிமன்றத்தில்…

Read More

புதுச்சேரி, மராட்டியம் உள்பட 11 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 28, 2024, 07.30 AM புதுடெல்லி, குஜராத் கேடரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி கே.கைலாசநாதன், புதுச்சேரி துணைநிலை கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி, மராட்டியம் உள்பட 11 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கவர்னர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சில மாநிலங்களில் புதிய கவர்னர்களை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். அதன்படி, புதுச்சேரி மாநில புதிய துணை நிலை கவர்னராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி…

Read More

எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி உருக்கமான வேண்டுகோள் ‘கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த ஒத்துழையுங்கள்’

பதிவு: திங்கட்கிழமை, ஜூலை 22, 2024, 06.00 PM புதுடெல்லி, $ எதிர்ப்பு அரசியலில் இருந்து வெளியே வாருங்கள் $ அனைவரும் ஒன்றிணைந்து நாட்டுக்காக உழைப்போம் ‘எதிர்ப்பு அரசியலில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளியே வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாம் அனைவரும் கட்சி வித்தியாசங்களை கடந்து நாட்டுக்காக உழைக்க வேண்டும்’ என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. ஆக்கப்பூர்வமான கூட்டத் தொடர் நடைபெற வேண்டும்…

Read More

சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக, சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தல்: பா.ஜ.க. சார்பில் ஓம் பிர்லா – இந்தியா கூட்டணியில் சுரேஷ் போட்டி

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2024, 05.20 PM புதுடெல்லி, 18வது நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பா.ஜ.க.வின் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இதன்மூலம், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்றது. இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை…

Read More