காந்தி ஜெயந்தியில் பிரசாந்த் கிஷோர் புது கட்சி ‘ஜன் சுராஜ்’ என தொடங்கினார் – மதுக்கடைகள் திறப்போம் என வாக்குறுதி!

பதிவு: வியாழக்கிழமை, அக்டோபர் 03, 2024, 05:10 AM பாட்னா, பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், பீஹாரில் புது கட்சி ஒன்றை துவக்கி உள்ளார். தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் மதுவிலக்கை ரத்து செய்வோம் எனவும் கூறியுள்ளார். பீஹாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலோசகரான இவர் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். பா.ஜ., காங்கிரஸ், திரிணமுல், தி.மு.க., உள்ளிட்ட வெவ்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர். கட்சி தொடங்கி…

Read More

ஜம்மு – காஷ்மீருக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல்

பதிவு: புதன்கிழமை, செப்டம்பர் 24 2024, 03.50 AM ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீருக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு – காஷ்மீரில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஜனாதிபதி ஆட்சியின் கீழ், கவர்னர் தலைமையில் நிர்வாகம் நடந்து வருகிறது. இங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்’ என, கோரிக்கைகள் எழுந்தன. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கடந்த 18-ம் தேதி முதல் கட்டமாக,…

Read More

இலங்கை அதிபராக பதவியேற்றார் அனுரா குமார திசநாயகே

பதிவு: திங்கள்கிழமை, செப்டம்பர் 23 2024, 02.20 PM கொழும்பு, இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. வாக்குப் பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 2022-ல் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதனால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்கு பிறகு நடந்த முதல் அதிபர் தேர்தல் இதுவாகும். இந்த தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே உள்பட 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். எனினும் சுயேச்சையாக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே, ஐக்கிய…

Read More

இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் – அநுர குமார திசாநாயக்க வெற்றி – முழு விபரம்

பதிவு: திங்கள்கிழமை, செப்டம்பர் 23 2024, 02.20 AM கொழும்பு, இலங்கையில் நடைபெற்ற ஒன்பதாவது அதிபர் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க 57,40,179 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் என்ற சிறப்புடன் அவர் பதவியேற்கவுள்ளார். ‘நிறைவேறியது நுாற்றாண்டுக்கனவு: புதிய மறுமலர்ச்சியை தொடங்குவோம்’ என்று அவர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த பிறகு, இலங்கை மெல்ல மெல்ல தலைதூக்கி வரும்…

Read More

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திப்பு

வாஷிங்டன், பதிவு: ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 22, 2024, 04.30 AM 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அவரது இல்லத்தில் சந்தித்தார். சந்திப்பின் போது தலைவர்கள் இருவர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமெரிக்கா தரப்பில் தேசிய பாதுகாப்பு செயலர் அன்டோனி பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களின் துணை தலைவர் ஜேக் சுல்லிவான் உள்ளிட்டோரும் இந்திய…

Read More

இலங்கையில் இன்று 9-வது அதிபர் தேர்தல்

கொழும்பு, பதிவு: சனிக்கிழமை, செப்டம்பர் 21, 2024, 3.50 AM இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்ய செப்டம்பர் 21-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி இலங்கையில் 9-வது அதிபர் தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை மெல்ல மெல்ல மீண்டு வரும் சூழலில் இந்த அதிபர் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் பெரும்பான்மையுடன்…

Read More

இன்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

வாஷிங்டன், பதிவு: சனிக்கிழமை, செப்டம்பர் 21, 2024, 3.40 AM ‛குவாட்’ மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அமெரிக்கா செல்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் ‘குவாட்’ அமைப்பின் மாநாடு, அமெரிக்காவின் டெல்வாரே நகரில் நடக்கிறது. ஜோ பைடன் தலைமையில் நடக்கும் இம்மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ( 21ம் தேதி ) அமெரிக்கா செல்கிறார். இந்த அமைப்பு கடந்த ஆண்டில் செய்த பணிகள் குறித்தும், வரும் ஆண்டில்…

Read More

டில்லி ஆம் ஆத்மி கட்சி புதிய முதல்வராக ஆதிஷி இன்று பதவியேற்பு

புதுடில்லி, பதிவு: சனிக்கிழமை, செப்டம்பர் 21, 2024, 3.30 AM டில்லி ஆம் ஆத்மி கட்சி புதிய முதல்வராக ஆதிஷி இன்று பதவியேற்க உள்ளார். இக்கட்சி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான சி.பி.ஐ., வழக்கில், கடந்த 15ல், உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, சிறையில் இருந்து வெளியே வந்தார். எனினும், முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகளால் அவர் அதிருப்தி அடைந்தார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள்…

Read More

இலங்கையில் நாளை (சனிக்கிழமை) அதிபர் தேர்தல் – வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம்

கொழும்பு, பதிவு: வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 20, 2024, 3.40 AM இலங்கையில் நாளை (சனிக்கிழமை) அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்த இலங்கை, சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன் மெல்ல மெல்ல சிக்கலில் இருந்து மீண்டு வருகிறது. சுற்றுலாப்பயணிகள் வருகை உள்ளிட்ட பல காரணங்களால் அந்த நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் நாளை (சனிக்கிழமை) அதிபர்…

Read More

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி, பதிவு: வியாழக்கிழமை, செப்டம்பர் 19, 2024, 4.30 AM ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும், தேர்தல் செலவு அதிகரிப்பதாகவும் அவர் கருதுகிறார். ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி…

Read More