அரசியல் சாசன தினம் – பிரதமர் மோடி சுப்ரீம் கோர்ட்டில் இன்று உரை

பதிவு: செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024, 03:10 AM புதுடெல்லி, அரசியல் சாசன தினத்தையொட்டி சுப்ரீம் கோர்ட்டிலும் இன்று சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய அரசியல் சாசன தினம் கொண்டாடப்படுகிறது. அதேநேரம் இந்த ஆண்டு, அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட 75-வது ஆண்டு ஆகும். எனவே கூடுதல் சிறப்புடன் மத்திய அரசு இந்த நாளை கொண்டாடுகிறது. இதையொட்டி பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு மத்திய அரசு…

Read More

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அபார வெற்றி – ஜார்கண்டில் ஆட்சியை தக்கவைத்த காங்கிரஸ் கூட்டணி

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024, 05:10 AM மும்பை, மராட்டியத்தில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்…

Read More

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தலில்… ஜெயிப்பது யார்?

பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 23, 2024, 07:10 AM புதுடில்லி, மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது. மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான ‘மஹாயுதி’ கூட்டணி ஆட்சியில் உள்ளது. இங்குள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 20ல் ஒரே கட்டமாக நடந்த தேர்தலில், 66.05 சதவீத ஓட்டுகள் பதிவாகின. கூடவே, நான்டெட் லோக்சபா தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது….

Read More

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது ஆண்டாண்டு காலமாக நமது மரபு வழி வந்தது – H.ராஜா பேட்டி

பதிவு: வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024, 03:10 AM மதுரை, மதுரை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் இதை திராவிட மாடல் ஆட்சியில் சட்டமானது என முதல்வர் கூறுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் பாஜக மூத்த தலைவர் H.ராஜா மதுரையில் பேட்டி. மதுரை ரேஸ் கோர்ஸ் காலனியில் உள்ள பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா வருகை தந்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர். மதுரை கிண்டியில் அரசு மருத்துவமனையில்…

Read More

“அரசு மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவம் அரசாங்கத்தின் தோல்வி” – வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேட்டி

பதிவு: வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024, 05:10 AM கோவை, கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் அமைந்துள்ள காய்கறி பஸ் ஸ்டாப் பகுதியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்களை சந்தித்தார்‌. இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறுகையில், சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த அரசு மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, அரசு மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமான செய்தியாக இருப்பதாகவும் தமிழகத்தில் சட்டம்…

Read More

‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ ராமதாஸ் சமூகவலைதள பதிவால் பரபரப்பு

பதிவு: திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024, 05:10 AM சென்னை, பழையன கழிவதை தடுக்க முடியாது, புதியன வருவதையும் நிறுத்த முடியாது, இரண்டையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்ற பொருள்படும் வகையிலான நன்னூல் வரியை ராமதாஸ் பதிவிட்டுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது சமூகவலைதள பக்கத்தில் அவ்வப்போது, சமூக பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இன்று ராமதாஸ் தனது சமூகவலைதள பக்கத்தில், ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’…

Read More

புதிய தொலைக்காட்சி சேனல் ‘தமிழ் ஒளி’ தொடங்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டு உள்ளார்

பதிவு: திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024, 05:00 AM சென்னை, தமிழகத்தில் உள்ள கட்சிகள் தனிதனியாக தொலைக்காட்சி சேனல்களை வைத்து இருக்கின்றன. தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு கடந்த மாதம் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடந்தது. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி…

Read More

5 நாட்கள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள பிரியங்கா காந்தி இன்று வயநாடு வருகை

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024, 05:00 AM வயநாடு, வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்ததால், காலியான அந்த தொகுதிக்கு வருகிற 13-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதற்காக அவர் கடந்த மாதம் 23-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து கடந்த மாதம் 28, 29-ந் தேதி என 2 நாட்கள்…

Read More

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தீபாவளி வாழ்த்து

பதிவு: புதன்கிழமை, அக்டோபர் 30, 2024, 11:10 PM சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது . இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , தீபங்களின் ஒளி வெள்ளத்தில் காரிருள் விலகி, நல்விடியல் பிறக்கட்டும். அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் அன்பு,…

Read More

முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து முதல்-அமைச்சர் மரியாதை

பதிவு: புதன்கிழமை, அக்டோபர் 30, 2024, 11:00 AM கமுதி, முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன்னில் சுதந்திர போராட்ட வீரர், தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை விழா நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று அரசியல் விழாவாக கொண்டாடப்பட்டது. தேவரின் அரசியல் வரலாறு, அரசியல் ஈடுபாடு குறித்த நிகழ்ச்சிகள் சொற்பொழிவு நடைபெற்றது. முத்துராமலிங்கத்தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில்…

Read More