தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது – சத்யபிரத சாகு தகவல்

சென்னை, பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024, 4.50 AM உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல் நேற்று தொடங்கியது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54…

Read More

நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு

சென்னை, பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024, 4.40 AM தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்கு பதிவாகியுள்ளது என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மாவட்டம் வாரியாக வாக்கு சதவிகிதம் விவரம் கள்ளக்குறிச்சி – 75.67 தர்மபுரி – 81.40 சிதம்பரம்…

Read More

நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 64% வாக்குப்பதிவு

புதுடெல்லி, பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024, 4.30 AM நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நேற்று நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்திய ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் இந்த பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 16-ந்தேதி வெளியானது.. ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியும்…

Read More

புதுவை மாநிலத்தில் 79 சதவீதம் வாக்குகள் பதிவானது

புதுவை, பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024, 4.15 AM வாக்குச்சாவடிகளில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவை தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஒரு சில வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் காத்திருந்ததால் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. புதுச்சேரியை பொறுத்த வரையில் மாலை 7 மணி நிலவரப்படி 77.51 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுது. இந்நிலையில், புதுச்சேரி…

Read More

முதற்கட்ட வாக்குப்பதிவு: நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நல்ல வரவேற்பு – பிரதமர் மோடி

புதுடெல்லி, பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024, 3.45 AM முதற்கட்ட ஓட்டுப்பதிவில் ஓட்டளித்த வாக்காளர்களுக்கு பிரதர் மோடி தனது நன்றியை தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் முற்கட்ட ஒட்டுப்பதிவு நேற்று நிறைவு பெற்றது. இத்தேர்தலில் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இது தொடர்பாக தனது ‛எக்ஸ்’ தளத்தில் பிரதமர் மோடி கூறியதாவது:- இன்று வாக்களித்த முதல்முறை வாக்காளர்கள் இந்தியா முழுதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர் என்பது தெளிவாகிறது. முதற்கட்ட தேர்தலில்…

Read More

நாளை நடைபெறும் நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் களம் காணும் 8 மத்திய மந்திரிகள்

புதுடெல்லி, பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2024 10.30 AM நாளை நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 8 மத்திய மந்திரிகள், 3 முன்னாள் முதல்-மந்திரிகள், ஒரு முன்னாள் கவர்னரின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி (நாளை) முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. இதற்காக நாடு முழுவதும் தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும்…

Read More

நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது – நாளை வாக்குப்பதிவு

சென்னை, பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 18, 2024 04.00 AM தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த அரசியல் கட்சிகளின் அனல்பறந்த பிரசாரம் ஓய்ந்தது. நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக…

Read More