ஜூன் 1-ந் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே 28, 2024, 09.20 AM புதுடெல்லி, மத்தியில் ஆட்சி அமைப்பது யார்? என்பது குறித்து ‘இந்தியா’ கூட்டணி டெல்லியில் வருகிற 1-ந் தேதி ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந் தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது….

Read More

நாடாளுமன்ற 7-ம் கட்ட தேர்தல்: பிரதமர் மோடி, நடிகை கங்கனா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் போட்டி

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே 28, 2024, 09.10 AM புதுடெல்லி, பிரதமர் மோடி வாரணாசி தொகுதியிலும், உமர் அப்துல்லா பாராமுல்லா தொகுதியிலும், நடிகை கங்கனா ரணாவத் மண்டி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். நாட்டில் 18-வது மக்களவைக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் மக்களவை தேர்தல் அல்லது பொது தேர்தலானது 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதன்படி, கடந்த 19-ந்தேதி முதல் கட்ட தேர்தலும், ஏப்ரல் 26-ந்தேதி 2-வது கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது. தொடர்ந்து மே 7, மே 13, மே…

Read More

பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் – சீமான்

பதிவு: புதன்கிழமை, மே 22, 2024, 04.20 PM சென்னை, பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை மீண்டும் 70% வரை உயர்த்த முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்துவதற்குக் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த மார்ச் மாதம்தான் பத்திரப்பதிவு கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திய தி.மு.க. அரசு தற்போது மேலும் 70% வரை…

Read More

நாடாளுமன்ற தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது – பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

புதுடெல்லி, பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024, 06.40 AM இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. அந்தவகையில் கேரளா (20…

Read More

இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் – ராகுல் காந்தி உறுதி

அமராவதி (மராட்டியம்), பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024, 05.30 AM இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி கூறினார் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முன்னுரிமை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய ராகுல்…

Read More

சாம் பிட்ரோடா கருத்து.. மரணத்திற்கு பிறகும் மக்களிடம் கொள்ளையடிக்க விரும்புகிறார்கள்: காங்கிரசை சாடிய மோடி

புதுடெல்லி, பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024, 05.20 AM நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், காங்கிரஸ் பறித்துவிடும் என மோடி குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, சாதிவாரி கணக்கெடுப்பு, பொருளாதார ரீதியிலான ஆய்வு தொடர்பாக ராகுல் காந்தி கூறிய கருத்து பேசுபொருளாகி உள்ளது. மக்களின் சொத்துக்களை அபகரித்து குறிப்பிட்ட சிலருக்கு வழங்க காங்கிரஸ் நினைப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். ஊடுருவல்காரர்களுக்கும், அதிக பிள்ளைகள் பெற்றவர்களுக்கும் வழங்குவார்கள் என்று…

Read More

நாடாளுமன்ற தேர்தல்: 3-ம் கட்ட தேர்தலில் 1,351 பேர் போட்டி

புதுடெல்லி, பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024, 05.15 AM குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி தமிழகம் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. 2-ம் கட்ட தேர்தல் வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது. அடுத்தகட்டமாக 3-ம் கட்ட தேர்தல் வரும் மே 7-ந் தேதி நடக்க இருக்கிறது. குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும்…

Read More

நாடாளுமன்ற தேர்தல்: ராகுல்காந்தி இன்று முதல் மீண்டும் பிரசாரம்

புதுடெல்லி, பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024, 09.00 AM உடல்நலக்குறைவு காரணமாக சிறிது இடைவெளிக்குப் பிறகு, ராகுல் காந்தி இன்று முதல் மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி, இடைவிடாமல் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் இந்திய கூட்டணி கூட்டம் நடைபெற இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், நிகழ்ச்சியில் பங்குபெறாமலே டெல்லி திரும்பினார். கூட்டத்தில் அவருக்கு பதிலாக மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கி பேசினார். தற்போது ராகுல்காந்தி…

Read More

பிரதமர் மோடியின் பேச்சால் எழுந்த சர்ச்சை.. இஸ்லாமியர்கள் குறித்து மன்மோகன் சிங் சொன்னது என்ன?

புதுடெல்லி, பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024, 07.45 AM பிரதமர் மோடியின் பேச்சு உண்மையான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி என்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசியதும், இஸ்லாமியர்கள் குறித்து தெரிவித்த கருத்தும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தாக்கிப் பேசிய அவர், நாட்டில் உள்ள பெண்களின் தங்கத்தை…

Read More

நாடாளுமன்ற தேர்தல்: குஜராத்தில் சோனியா, ராகுல், கார்கே உள்பட 40 பேர் நட்சத்திர பேச்சாளர்கள்

ஆமதாபாத், பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024, 07.30 AM குஜராத்தில் காங்கிரசின் 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சோனியா, ராகுல், கார்கே பெயர்கள் இடம்பெற்றுள்ளன. நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 26-ந் தேதி நடக்க உள்ளது. குஜராத்தில் மே 7-ந் தேதி 26 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதையொட்டி அங்கு பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. காங்கிரசின் மூத்த தலைவர்களான சோனியாகாந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன…

Read More