yuganesan

சென்னையில் ஓட்டுப்போடாத 21 லட்சம் வாக்காளர்கள் – ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை, பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2024, 06.15 AM சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளில் 21 லட்சம் வாக்காளர்கள் ஓட்டுப்போடவில்லை என மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னையில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்து வாக்கு எந்திரங்கள் அந்தந்த பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், சென்னை லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு…

Read More

பரபரக்கும் வயநாடு நாடாளுமன்ற தொகுதி: பா.ஜனதாவில் இணைந்த காங்கிரஸ் தலைவர்

வயநாடு, பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2024, 06.10 AM பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, தான் பா.ஜனதாவில் இணைந்ததாக சுதாகரன் தெரிவித்தார். கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் ராகுல்காந்தி 2-வது முறையாக போட்டியிடுகிறார். அவர் சமீபத்தில் வயநாட்டுக்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்து விட்டு சென்றார். இதற்கிடையே வயநாடு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த சுதாகரன் நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மாவட்ட பா.ஜனதா தலைவர் பிரசாந்த் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தார்….

Read More

மதுபான கொள்கை முறைகேடு குற்றவாளியிடம் ரூ.60 கோடி பெற்ற பா.ஜனதா – ஆம் ஆத்மி பரபரப்பு குற்றச்சாட்டு

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2024, 05.55 AM புதுடெல்லி, ரூ.60 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் சரத் ரெட்டி பா.ஜனதாவுக்கு கொடுத்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு விவகாரம் மாநில அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் உள்பட கட்சியினர் பலரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் ஆம் ஆத்மி கட்சி,…

Read More

அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை விவரம்… கவர்னருக்கு அறிக்கை அனுப்பியது திகார் சிறை நிர்வாகம்

பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2024, 05.45 AM புதுடெல்லி, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அளித்த சரிவிகித உணவு திட்டத்தில் கடுமையாக தடை செய்த பல உணவுகளையே கெஜ்ரிவால் சாப்பிட்டு வருகிறார் என திகார் சிறை நிர்வாகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ல் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து,…

Read More

“ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்” – துரை வைகோ திட்டவட்டம்

சென்னை, பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2024, 05.15 AM தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்று திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் துரை வைகோ தெரிவித்தார். சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டேன். இந்த பரப்புரையின் போது தி.மு.க.வின் 3…

Read More

தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக ஹசீனா சையத் நியமனம்

சென்னை, பதிவு: ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2024, 05.05 AM இதற்கான அறிவிப்பை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று வெளியிட்டார். தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக வக்கீல் சுதா பதவி வகித்தார். அவர், நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை வேட்பாளராக களமிறக்கப்பட்டார். இந்த நிலையில், தமிழக மகிளா காங்கிரஸ் புதிய தலைவராக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று வெளியிட்டார். ஹசீனா…

Read More

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது – சத்யபிரத சாகு தகவல்

சென்னை, பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024, 4.50 AM உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல் நேற்று தொடங்கியது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54…

Read More

நாடாளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்குப்பதிவு

சென்னை, பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024, 4.40 AM தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நேற்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் 72.09 சதவிகித வாக்கு பதிவாகியுள்ளது என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மாவட்டம் வாரியாக வாக்கு சதவிகிதம் விவரம் கள்ளக்குறிச்சி – 75.67 தர்மபுரி – 81.40 சிதம்பரம்…

Read More

நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 64% வாக்குப்பதிவு

புதுடெல்லி, பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024, 4.30 AM நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நேற்று நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்திய ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் இந்த பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 16-ந்தேதி வெளியானது.. ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியும்…

Read More

புதுவை மாநிலத்தில் 79 சதவீதம் வாக்குகள் பதிவானது

புதுவை, பதிவு: சனிக்கிழமை, ஏப்ரல் 20, 2024, 4.15 AM வாக்குச்சாவடிகளில் வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் 102 மக்களவை தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஒரு சில வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் காத்திருந்ததால் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. புதுச்சேரியை பொறுத்த வரையில் மாலை 7 மணி நிலவரப்படி 77.51 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுது. இந்நிலையில், புதுச்சேரி…

Read More