yuganesan

பிரதமர் மோடி 30ம் தேதி தமிழ்நாடு வருகை

பதிவு: செவ்வாய்க்கிழமை, மே 28, 2024, 09.00 AM சென்னை, பிரதமர் மோடி வரும் 30ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 30ம் தேதி பிரதமர் மோடி கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 30ம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி கன்னியாகுமரி வர உள்ளார். அவர் 31ம் தேதி முதல் 1ம் தேதி…

Read More

ஐ.பி.எல். இறுதிப்போட்டி: 3-வது முறையாக கொல்கத்தா அணி “சாம்பியன்”

பதிவு: திங்கட்கிழமை, மே 27, 2024, 03.00 AM சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிபோட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் ஷர்மாவும்…

Read More

பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் – சீமான்

பதிவு: புதன்கிழமை, மே 22, 2024, 04.20 PM சென்னை, பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை மீண்டும் 70% வரை உயர்த்த முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்துவதற்குக் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த மார்ச் மாதம்தான் பத்திரப்பதிவு கட்டணத்தை 3 மடங்கு உயர்த்திய தி.மு.க. அரசு தற்போது மேலும் 70% வரை…

Read More

மாணவிகளிடம் பாலியல் பேரம் புகார்: பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் இன்று தீர்ப்பு

பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024, 06.50 AM ஸ்ரீவில்லிபுத்தூர், கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி பாலியல் பேரம் பேசியதாக நிர்மலாதேவி மீது புகார்கள் எழுந்தன. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தவர் நிர்மலா தேவி. இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 16-ந்தேதி நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை…

Read More

நாடாளுமன்ற தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது – பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

புதுடெல்லி, பதிவு: வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024, 06.40 AM இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. அந்தவகையில் கேரளா (20…

Read More

செவ்வாய் கிரகம்போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: பொதுமக்கள் பீதி – நாசா விளக்கம்

ஏதென்ஸ், பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024, 05.40 AM ஐரோப்பா நாடான கிரீசின் ஏதென்ஸ் நகரம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. ஐரோப்பா கண்டத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றானது கிரீஸ் தலைநகரம் ஏதென்ஸ். பல்வேறு சிறப்புகளுக்கு பெயர்போனதாக விளங்கி வரும் ஏதென்ஸ் நகரம் உலகின் மிகவும் தொன்மையான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் மையப்புள்ளியாக ஏதென்ஸ் விளங்குகிறது. நவீன…

Read More

இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் – ராகுல் காந்தி உறுதி

அமராவதி (மராட்டியம்), பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024, 05.30 AM இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி கூறினார் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முன்னுரிமை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மராட்டிய மாநிலம் அமராவதி மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசிய ராகுல்…

Read More

சாம் பிட்ரோடா கருத்து.. மரணத்திற்கு பிறகும் மக்களிடம் கொள்ளையடிக்க விரும்புகிறார்கள்: காங்கிரசை சாடிய மோடி

புதுடெல்லி, பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024, 05.20 AM நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், காங்கிரஸ் பறித்துவிடும் என மோடி குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, சாதிவாரி கணக்கெடுப்பு, பொருளாதார ரீதியிலான ஆய்வு தொடர்பாக ராகுல் காந்தி கூறிய கருத்து பேசுபொருளாகி உள்ளது. மக்களின் சொத்துக்களை அபகரித்து குறிப்பிட்ட சிலருக்கு வழங்க காங்கிரஸ் நினைப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். ஊடுருவல்காரர்களுக்கும், அதிக பிள்ளைகள் பெற்றவர்களுக்கும் வழங்குவார்கள் என்று…

Read More

நாடாளுமன்ற தேர்தல்: 3-ம் கட்ட தேர்தலில் 1,351 பேர் போட்டி

புதுடெல்லி, பதிவு: வியாழக்கிழமை, ஏப்ரல் 25, 2024, 05.15 AM குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 96 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி தமிழகம் உள்ளிட்ட இடங்களில் நடந்தது. 2-ம் கட்ட தேர்தல் வரும் 26-ந் தேதி நடைபெற உள்ளது. அடுத்தகட்டமாக 3-ம் கட்ட தேர்தல் வரும் மே 7-ந் தேதி நடக்க இருக்கிறது. குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும்…

Read More

நாடாளுமன்ற தேர்தல்: ராகுல்காந்தி இன்று முதல் மீண்டும் பிரசாரம்

புதுடெல்லி, பதிவு: புதன்கிழமை, ஏப்ரல் 24, 2024, 09.00 AM உடல்நலக்குறைவு காரணமாக சிறிது இடைவெளிக்குப் பிறகு, ராகுல் காந்தி இன்று முதல் மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தி, இடைவிடாமல் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஞ்சியில் இந்திய கூட்டணி கூட்டம் நடைபெற இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால், நிகழ்ச்சியில் பங்குபெறாமலே டெல்லி திரும்பினார். கூட்டத்தில் அவருக்கு பதிலாக மல்லிகார்ஜுன கார்கே தலைமை தாங்கி பேசினார். தற்போது ராகுல்காந்தி…

Read More