yuganesan

கீழே அறுந்து விழுந்த மின்சார ஒயர் மிதித்ததில் வாலிபர் பலி

பதிவு: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 15, 2024, 08:00 AM சென்னை, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பூக்கடை சத்திரம் பகுதியை சேர்ந்த வாலிபர் தீலிப் குமார். வீட்டின் அருகாமையில் வீட்டிலிருந்து மின் கம்பத்துக்கு செல்லும் மின் ஒயர் அருந்து கீழே விழுந்துள்ளது. இதனை அறியாமல் சென்ற வாலிபர் மின் ஒயரை மிதித்ததில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலி, சிவகாஞ்சி போலீசார் விசாரணை

Read More

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி

பதிவு: திங்கட்கிழமை, அக்டோபர் 14, 2024, 11:00 AM சென்னை, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. வங்கக்கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இன்று காலை 5.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடலில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து புதுசேரி, வடதமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையில் அடுத்த 2 நாட்கள் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை…

Read More

சென்னையின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை

பதிவு: திங்கட்கிழமை, அக்டோபர் 14, 2024, 08:20 AM சென்னை, சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தமிழக உள்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் இன்று…

Read More

ஆம்ஸ்ட்ராங் வளர்ச்சியை தடுக்கவே கொலை – ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பதிவு: வெள்ளிக்கிழமை, அக்டோபர் 04, 2024, 04:20 AM சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு மொத்தம் 10 லட்சம் செலவு செய்யப்பட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பொன்னை பாலு, ரவுடி திருவேங்கடம் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் போலீசார் பிடியில் இருந்து…

Read More

காந்தி ஜெயந்தியில் பிரசாந்த் கிஷோர் புது கட்சி ‘ஜன் சுராஜ்’ என தொடங்கினார் – மதுக்கடைகள் திறப்போம் என வாக்குறுதி!

பதிவு: வியாழக்கிழமை, அக்டோபர் 03, 2024, 05:10 AM பாட்னா, பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர், பீஹாரில் புது கட்சி ஒன்றை துவக்கி உள்ளார். தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் மதுவிலக்கை ரத்து செய்வோம் எனவும் கூறியுள்ளார். பீஹாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலோசகரான இவர் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். பா.ஜ., காங்கிரஸ், திரிணமுல், தி.மு.க., உள்ளிட்ட வெவ்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர். கட்சி தொடங்கி…

Read More

அக்டோபர் 3-வது வாரம் கனமழை வாய்ப்பு தமிழக மக்களே கவனியுங்கள்

பதிவு: புதன்கிழமை, அக்டோபர் 02, 2024, 04:00 AM சென்னை, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 112 சதவீதம் கூடுதலாக பெய்யும்,” என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே மே 30ல் துவங்கியது. வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் ஏற்பட்ட நிகழ்வுகள் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் மழை கொட்டி தீர்த்தது. தற்போது பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை விலகத் துவங்கியுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் பருவமழை…

Read More

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

பதிவு: செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 01, 2024, 04:00 AM சென்னை, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 10ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து கூலி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்….

Read More

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

பதிவு: வியாழக்கிழமை, செப்டம்பர் 26, 2024, 08.50 AM புதுடெல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு அளிக்கிறது. தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதான பண மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின்…

Read More

ஜம்மு – காஷ்மீருக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல்

பதிவு: புதன்கிழமை, செப்டம்பர் 24 2024, 03.50 AM ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீருக்கு இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு – காஷ்மீரில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஜனாதிபதி ஆட்சியின் கீழ், கவர்னர் தலைமையில் நிர்வாகம் நடந்து வருகிறது. இங்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்’ என, கோரிக்கைகள் எழுந்தன. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கடந்த 18-ம் தேதி முதல் கட்டமாக,…

Read More

ஆந்திராவில் கைதான ரவுடி சீசிங் ராஜா சென்னையில் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்ப்பட்டது ஏன்? – முழு விபரம்

பதிவு: செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 24 2024, 02.50 AM சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா நேற்று என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜுலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இக்கொலை சென்னையை மட்டும் அல்லாமல் தமிழகத்தையே உலுக்கியது. இந்த விவகாரம் தொடர்பாக செம்பியம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்….

Read More