
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக பதவி ஏற்றார் வி.சி.சந்திரகுமார்
பதிவு: செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025, 06:`45 AM
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் நேற்று காலை ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்து, அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 8-ந்தேதி நடந்தது. இதில் ஆளும் தி.மு.க.வை சேர்ந்த வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1 லட்சத்து 14 ஆயிரத்து 439 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்றார். இதனால் 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் வி.சி.சந்திரகுமார் ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, கூட்டணி கட்சி தலைவர்களான திருமாவளவன், செல்வப்பெருந்தகை, வைகோ, முத்தரசன், சண்முகம், கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
