பெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கிறது – சென்னையில் விடிய விடிய காற்றுடன் மழை

Spread the love

பதிவு: சனிக்கிழமை, நவம்பர் 30, 2024, 06:40 AM

சென்னை,

புயல் இன்று கரையக் கடப்பதால் பொது மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவறுத்தி உள்ளது.

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருக்கிறது.

புயல் எச்சரிக்கை: மெட்ரோ ரெயில்கள் வழக்கம்போல் இயக்கம்

பெஞ்சல் புயலின்போதும் மெட்ரோ ரெயில்கள் இன்று வழக்கம்போல் சனிக்கிழமை அட்டவணைப்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் சென்னையில் இருந்து 190 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 7 கி.மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று மாலை கரையைக் கடக்க உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதன்படி, சென்னையில் நேற்று இரவில் இருந்து தற்போது வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. செண்டிரல், எழும்பூர், கிண்டி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, வண்ணாரப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாசாலை, மயிலாப்பூர், அடையார் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதைபோல சென்னை புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

புயல் எச்சரிக்கை: சென்னை உட்பட 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கிறது.

வங்கக்கடலில் நேற்று உருவான பெஞ்சல் புயல் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று (சனிக்கிழமை) மதியம் அல்லது இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதைபோல புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் 2 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை

புயல் காரணமாக இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள இரண்டு தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் தலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *