விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருவக்கரை பகுதியில் பெண் அடித்து கொலை

Spread the love

பதிவு: புதன்கிழமை, நவம்பர் 13, 2024, 05:10 AM

வானூர்,

புதுச்சேரி வடுவ குப்பம் பகுதியை சேர்ந்தவர் இளவரசி வயது 38. கணவனை பிரிந்து வாழும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜு என்பவரிடம் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு ராஜு இளவரசியை அடித்து கொலை செய்து தமிழக பகுதியான திருவக்கரை பகுதியில் மூட்டை கட்டி வாழை இலையில் மடித்துவீசி உள்ளார்.

இதுகுறித்து புதுவை மாநிலம் நெட்டப்பாக்கம் போலீசார், நேற்று பெண் காணவில்லை என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று வானூர் அடுத்த திருவக்கரையில் வானூர் போலீசார் உடலை தற்போது மீட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

ராஜி இளவரசியை அடித்து கொன்றுவிட்டு போலீசாருக்கு பயந்து புதுவை நெட்டப்பாக்கம் போலீசார் உடன் சரணடைந்தார் போலீசார் அவனை அழைத்துச் சென்று தமிழக போலீசார் உதவியுடன் அந்த பெண் உடலை மீட்டு ராஜியை தமிழக போலீசார் உடன் புதுவை போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

தமிழக போலீசார் ராஜியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் முதற்கட்ட விசாரணையில் இளவரசியின் குழந்தையை பராமரிப்பதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளதாகவும் இது சம்பந்தமாக இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக இதனால்தான் ராஜி இளவரசியை அடித்து கொன்றதாக போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *