தீப உற்சவ நிகழ்ச்சி: சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீப விளக்குகள் – உலக சாதனை படைத்த அயோத்தி

Spread the love

பதிவு: புதன்கிழமை, அக்டோபர் 30, 2024, 11:00 PM

லக்னோ,

அயோத்தியின் சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்து மத பண்டிகையான தீபாவளி உலகம் முழுவதும் நாளை (31ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.

இதனிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி உத்தரபிரதேசத்தில் அயோத்தில் சரயு நதிக்கரையில் லட்சக்கணக்கான தீப விளக்குகளை ஏற்றுவது வழக்கம். தீபாவளி பண்டிகையின் முந்தைய நாளன்று ராமாயணத்தின்படி கடவுள் ராமர் வனவாசம் முடிந்து நாடு திரும்பிய நிகழ்வு கொண்டாடும் விதமாக தீப உற்சவம் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அயோத்தியின் சரயு நதிக்கரையில் 28 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 22 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 28 லட்சத்து 12 ஆயிரத்து 585 லட்சம் தீப விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய கின்னஸ் சாதனையை அயோத்தி படைத்துள்ளது.

அயோத்தியில் நடைபெற்று வரும் தீப உற்சவ நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். 28 லட்சம் தீப விளக்குகள் ஒரேநேரத்தில் ஏற்றப்பட்டுள்ளதால் சரயு நதிக்கரை விளக்கு ஒளியில் ஜொலிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *