
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 20, 2024, 12:40 PM
சென்னை,
பெருநகர் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலம் 7 அம்பத்தூர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் தங்களுடைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு சான்றிதழ்கள், மற்றும் வருவாய்த்துறைக்கு சம்பந்தமாக ஆவணங்கள் எடுத்துக்கொண்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த குறைகளுக்கு வரக்கூடிய பொதுமக்களிடம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகார் காரணமாக லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையில் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 2. லட்சம் பணம் சிக்கியது. இது தொடர்பாக உதவி வருவாய் அலுவலர் ஆறுமுகம் என்பவரை பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.