கள்ளக்குறிச்சி விவகாரம்: அப்பாவிகள் உயிர் போனதற்கு யார் பொறுப்பு? ஐகோர்ட்டு சரமாரி கேள்வி

Spread the love

பதிவு: வெள்ளிக்கிழமை, ஜூன் 21, 2024, 05.10 PM

சென்னை,

கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பறி போயுள்ளது. இதற்கு யார் பொறுப்பு’ என சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி அ.தி.மு.க., சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விழுப்புரம், மரக்காணம் சம்பவத்திற்கு பிறகு கள்ளச்சாராய விற்பனையை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும்.

கல்வராயன் மலை பகுதிகளில் அரசியல் அதிகாரம் உள்ளவர்கள் துணையோடு கள்ளச்சாராய விற்பனை என செய்தி வருகிறது. விற்பனை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு வந்தும் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்? கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தும் அப்பாவி உயிர்கள் பறி போயுள்ளது. இதற்கு யார் பொறுப்பு. இது தொடர்பாக, வரும் 26-ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் வாதிட்டார். அவர் முன்வைத்த வாதத்தில், பொதுநல வழக்கு என்றுக்கூறி அரசியல் உள்நோக்கத்துடன் வாதம் முன்வைக்கப்பட்டது. மனுதாரர் கட்சி ஆட்சியில் இருந்த போது 2001-ம் ஆண்டு புதுப்பேட்டையில் விஷச்சாராய மரணம் நிகழ்ந்தது. கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 போலிசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் மருத்துவக்குழு, ஐ ஏ எஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர். நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் கைது நடவடிக்கைகள் இருக்கும். அவர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் இருக்கும். விஷச்சாராய மரணங்களை தடுப்பது தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது” என வாதிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *