சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா? – ஐகோர்ட்டில் இன்று விசாரணை

பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2024, 08.50 AM சென்னை, பார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது. வரும் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை…

Read More

இங்கிலாந்து சென்றாலும், எனது இதயம் தமிழகத்தில்தான் இருக்கும் – அண்ணாமலை பேட்டி

பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2024, 08.20 AM சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய், ஸ்பெயினுக்கு சென்றபோது ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை என்று அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாத உயர் படிப்புக்காக இன்றிரவு இங்கிலாந்து செல்கிறேன். அரசியல் படிப்புக்காக வெளிநாடு சென்றாலும் தமிழக அரசின் நடவடிக்கைகளை உற்று கவனிப்பேன். ஆளுக்கட்சிக்கு எதிரான சண்டை தொடரும். வெளிநாடு சென்றாலும், எனது…

Read More

கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ் நாட்டில்தான்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 28, 2024, 08.10 AM சென்னை, கட்சியினரின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அமெரிக்கா சுற்றுப்பயணம் செல்கிறார். வெளிநாடு பயணம் மேற்கொள்ள நிலையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- கடல் கடந்து சென்றாலும் கவனமெல்லாம் தமிழ்நாட்டில் தான் இருக்கும். அமெரிக்காவில் இருந்தாலும் தாய்வீடான தமிழ்நாடு பற்றியேதான் என்…

Read More

முதலீடுகளை ஈர்க்க இன்று அமெரிக்கா செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பதிவு: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 27, 2024, 07.10 AM சென்னை, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா செல்கிறார். தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி (இன்று) அமெரிக்கா செல்கிறார். இரவு 10 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து…

Read More

போலி பேராசிரியர்கள் விவகாரம் – 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை

பதிவு: திங்கட்கிழமை, ஆகஸ்ட் 26, 2024, 07.30 AM சென்னை, 295 தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போலி பேராசிரியர்கள் விவகாரத்தில் தொடர்புடைய 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பேராசிரியர்கள் முறைகேடாக பணியில் சேர்ந்ததாக தனியார் அமைப்பு ஒன்று வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. இதையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் இதில்…

Read More

கிருஷ்ணகிரி பாலியல் அத்துமீறல் வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு – சிவராமனின் தந்தையும் உயிரிழப்பு – நடந்தது என்ன?

பதிவு: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2024, 09.20 AM கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணி அளவில் உயிரிழந்தார். நடந்தது என்ன? கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த முகாமில் கலந்துகொண்ட 12…

Read More

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் விசாரணை நிலை என்ன? – சிறப்பு புலனாய்வுக் குழு விவரிப்பு

பதிவு: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2024, 06.20 AM கிருஷ்ணகிரி, பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில் 12 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு பல்நோக்கு குழு தனது விசாரணையை தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த போலி என்சிசி முகாமில், 12 வயதுடைய பள்ளி மாணவியை, நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், போலி…

Read More

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை உறுதிமொழி ஏற்று கொடியை அறிமுகம் செய்தார் விஜய்

பதிவு: வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2024, 06.10 AM சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அதன் தலைவரும், நடிகருமான விஜய் நேற்று அறிமுகம் செய்தார். கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை இந்தாண்டு பிப்ரவரியில் துவக்கினார். கட்சியின் கொடி, கொள்கை விளக்க பாடல் வெளியிடும் நிகழ்ச்சி, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கொடியை அறிமுகம் செய்த விஜய்,…

Read More

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா? – நெல்சன் மனைவி கொடுத்த ரூ.75 லட்சம்?

பதிவு: வியாழக்கிழமை, ஆகஸ்ட் 22, 2024, 06.10 AM சென்னை, நெல்சன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.75 லட்சம் மொட்டை கிருஷ்ணனுக்கு சென்றிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த…

Read More

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்

பதிவு: புதன்கிழமை, ஆகஸ்ட் 21, 2024, 05.20 AM சென்னை, சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பண உதவி செய்திருப்பது தெரிய வந்தது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனுக்கு எதிராக சென்னை போலீசர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். தாய்லாந்திற்கு தப்பி சென்று இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சென்னை காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை…

Read More