
‘மோடி 3.0’: மத்திய மந்திரிகளுக்கு இலாக்கா ஒதுக்கீடு – யார் யாருக்கு எந்த துறை? – முழு விபரம்
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன் 11, 2024, 02.45 AM புதுடில்லி, 3வது முறையாக மோடி பிரதமராக 09-06-2024 பதவியேற்றார். ‘மோடி 3.0’ அமைச்சரவையில் 71 பேர் பொறுப்பேற்றுள்ளனர். மொத்தம் 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், ஐந்து பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாகவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றனர். மோடி உட்பட பா.ஜ.,வை சேர்ந்த 61 பேரும், கூட்டணி கட்சியில் 11 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். பிரதமர் மோடி: :பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும்…