
சுதந்திரத்திற்கு பிறகு முதல்முறையாக, சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தல்: பா.ஜ.க. சார்பில் ஓம் பிர்லா – இந்தியா கூட்டணியில் சுரேஷ் போட்டி
பதிவு: செவ்வாய்க்கிழமை, ஜூன் 25, 2024, 05.20 PM புதுடெல்லி, 18வது நாடாளுமன்றத்தின் மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பா.ஜ.க.வின் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இதன்மூலம், இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்றது. இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை…