
வாஷிங்டன்,
பதிவு: ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 22, 2024, 04.30 AM
3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி குவாட் உச்சி மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அவரது இல்லத்தில் சந்தித்தார். சந்திப்பின் போது தலைவர்கள் இருவர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அமெரிக்கா தரப்பில் தேசிய பாதுகாப்பு செயலர் அன்டோனி பிளிங்கன் மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரங்களின் துணை தலைவர் ஜேக் சுல்லிவான் உள்ளிட்டோரும் இந்திய தரப்பில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் இந்திய அமெரிக்க தூதர் வினய் மோகன் கவாத்ரா கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் விவகாரம், ரஷ்யா மற்றும் முக்கியத்துவம் பெறுகிறது மேலும், இரு தலைவர்களும் இந்தே பசிபிக் பொருளாதார கட்டமைப்பு மற்றும் அமெரிக்கா இந்தியா மருத்துவ கட்டமைப்பு குறித்தும் பேச்சு வார்த்தைகள் நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
